நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 14 வது தவணை எப்போது வெளியாகும் என விவசாயிகள் அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் எந்த விவசாயிகள் தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உண்டு. அதே சமயம் இந்த திட்டத்தின் கீழ் தகுதி இல்லாதவர்களும் உள்ளனர்.

அதாவது நிறுவனம் வைத்திருக்கும் நில உரிமையாளர்கள், அரசியலமைப்பு பதிவுகளை வகிக்கும் விவசாய குடும்பங்கள், மாநிலம் மற்றும் மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்ற தொழில் வல்லுனர்கள், பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மாதாந்திர ஓய்வூதியம் பெரும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற தகுதி இல்லாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.