இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பல வாகனங்களுக்கு “ஒரு வாகனம் ஒரே பாஸ்டேக்”, பயன்படுத்துவதை தடுக்கவும் நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலை முறைப்படுத்தவும் ஒரு வாகனம் ஒரு பாஸ்டேக் என்ற கொள்கை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் கேஒய்சி அப்டேட் செய்து முடிக்க வரும் 29ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அப்டேட் செய்ய தவறியவர்கள் உடனே அப்டேட் செய்யவும். எப்படி அப்டேட் செய்வது என்பது குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

இதற்கு முதலில் https://fastag.ihmcl.com என்ற இணையதளத்திற்கு சென்று செல்போன் எண் மூலம் லாகின் செய்து My Profile ஆப்ஷனை கிளிக் செய்து அதில் KYC என்பதை தேர்வு செய்து விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். அதேபோல் வங்கியின் இணையதளத்திற்கு சென்று உங்கள் பாஸ்ட்டேக் அக்கவுன்ட்டை லாகின் செய்து KYC விவரங்களை அப்டேட் செய்யலாம். பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வோட்டர் ஐடி, பான் கார்டு, ஆதார் கார்டு, அரசு ஊழியர் என்றால் என்ஆர்இஜிஏ ஜாப் கார்டு பயன்படுத்தி KYC அப்டேட் செய்ய முடியும்.