
மேற்கு வங்காள மாநிலம் பன்குரா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தி தத்தா என்பவரது பெயர், அரசு ரேஷன் கார்டில் தவறாக “ஸ்ரீகாந்தி குட்டா” என தவறாக வந்தது. தனது உண்மையான குடும்பப்பெயரான ‘தத்தா’ என திருத்தம் செய்யக் கோரி அவர் மூன்று முறை விண்ணப்பித்தும், எந்த பதிலும் வழங்கப்படவில்லை. ஹிந்தியில் குட்டா என்பதற்கு நாய் என்று பொருள். இதனால் மன உளைச்சலுடன், 2022 ஆம் ஆண்டு அவர் எடுத்து கொண்ட அதிரடித் தீர்மானம் இணையத்தில் மீண்டும் பரவலாகப் பரவி வருகிறது.
Man barks at officer who wrongly printed his name from Dutta to Kutta pic.twitter.com/Di5uRPcLCI
— Anshul (@anshul_aliganj) July 3, 2025
பரபரப்பான அந்த காணொளியில், அவர் ஒரு அரசு அதிகாரி சென்று கொண்டிருந்த காரை நிறுத்துகிறார். பின்னர், அவர் குரைத்தபடி தனது ரேஷன் கார்டில் உள்ள தவறான பெயரைத் திருத்திக் கொடுக்கக் கோருகிறார். வீடியோவில், அவர் ஏற்கனவே மூன்று முறை தன்னுடைய பெயரை மாற்ற விண்ணப்பித்ததாகவும், மீண்டும் தவறாக “குட்டா” என வந்ததால், மனமுடைந்த நிலையில் இந்த மோசமான முறையில் தனது எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் கூறுகிறார்.
இதுபற்றி செய்தியாளரிடம் பேசிய அவர், “முதல் இரண்டு முறை என் பெயரை சரியாக மாற்றவில்லை. மூன்றாவது முறையில் என் பெயரையே வேறு அர்த்தம் கொண்டு வரும் ‘குட்டா’ என எழுதி விட்டார்கள். அதனால் பெரும் அவமானம் மற்றும் மன உளைச்சலை சந்திக்க வேண்டி வந்தது,” என்று தெரிவிக்கிறார். மேலும், “நேற்று திருத்தம் செய்ய மீண்டும் BDO அலுவலகத்திற்குச் சென்றேன். அதிகாரி என்னை நிராகரித்தார். அதனால் தான் அவர் கவனம் செலுத்த இந்தபோன்று செய்ய வேண்டியிருந்தது” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், சாதாரண மக்களின் புகார்கள் மீது அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. அரசு மற்றும் நிர்வாக அமைப்புகள் பொதுமக்களின் மன நிலையை புரிந்து கொண்டு, தகுந்த முறையில் தீர்வு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.