
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர் தேவ் முகர்ஜி. இவருக்கு 83 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவர் பிரம்மாஸ்திரா படத்தை இயக்கிய இயக்குனர் அயன் முகர்ஜியின் தந்தை ஆவார். அதோடு நடிகை ராணி முகர்ஜி மற்றும் நடிகை கஜோலின் உறவினரும் கூட. இவருடைய தந்தை சசாதார் முகர்ஜி ஒரு புகழ்பெற்ற தயாரிப்பாளர்.
இவருடைய தாயார் சதி தேவி முகர்ஜி புகழ் பெற்ற நடிகர்கள் அசோக் குமார், அனுப் குமார் மற்றும் கிஷோர் குமாரின் சகோதரி ஆவார். மேலும் இன்று அவர் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த நிலையில் பாலிவுட் திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.