உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ ஆவார். இவர் மீது அமெரிக்காவை சேர்ந்த தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் என்ற பத்திரிகை நிறுவனம் பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளது. அதாவது தன் நிறுவனத்தில் பணி புரியும் பெண்களுடன் மஸ்க் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும் அதில் ஒரு பெண்ணிடம் தன் குழந்தைகளை பெற்று தருமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதோடு பயிற்சிக்காக வந்த பெண்களிடமும் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண் ஒருவர் ராஜினாமா செய்தார். அப்போது அவர் மஸ்க் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு கூறியதாகவும் தன் குழந்தைகளை பெற்று தர வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்திருந்தார். இதே போன்று கடந்த 2016 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் பணிபுரிந்த விமான பணிப்பெண் ஒருவர் ‌ தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்காக தனக்கு ஒரு குதிரையை வாங்கித் தர மஸ்க்‌ முன் வந்தார் என்று கூறியிருந்தார்.

அந்நிறுவனத்தில் பணிபுரிந்த மற்றொரு பெண்ணும் அடிக்கடி இரவு நேரத்தில் தன் வீட்டிற்கு வருமாறு மஸக் அழைத்ததாக கூறியிருந்தார். அதோடு உயர் அதிகாரிகளுடன் மீட்டிங் நடைபெறும் போது கொக்கைன், எல்எஸ்டி, எக்ஸ்டசி போன்ற போதைப்பொருட்களை அவர் பயன்படுத்தியதாகவும் குற்ற சாட்டுகள் எழுந்தது. மேலும் இப்படி பல குற்றச்சாட்டுகள் ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது பத்திரிகை நிறுவனம் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.