தெலுங்கானா மாநிலம் ரங்க ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது(32). பஸ்ரத் இவரது மனைவி ஷபானா பர்வீன்(22) ஷபானா தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். அந்த ஒன்றாம் தேதி முகமது தனது மனைவி ஷபானாவை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோண்டாபூரில் உள்ள நெடுஞ்சாலையில் வைத்து முகமது ஷபானாவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் மனைவியின் மீது கொடூரமாக செங்கற்களால் ஓங்கி அடித்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. தாக்குதல் நடத்திவிட்டு முகமது அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.