பெங்களூருவில் உபெர் பார்சல் சேவை ஊழியர் ஒருவர் குறித்து இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் அனேரி தாக்கர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தனது வீட்டிற்கு பார்சல் எடுக்க வந்த ஊழியர் மதுபோதையில் இருந்ததாகவும், இதனால் தனக்கு அச்சமான சூழல் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

349 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களை கொண்ட அனேரி தாக்கர், இந்த சம்பவத்தை “ஆபத்தான அனுபவம்” என குறிப்பிட்டுள்ளார். தனது வீட்டில் தங்கியிருந்த தோழி, தனது ஜாக்கெட்டை மறந்து சென்றதாகவும், அதை திருப்பி அனுப்புவதற்காக இரவு சுமார் 9.30 மணியளவில் உபெர் பார்சல் சேவையை முன்பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aneri Thakkar | Growth Mindset | People skills | Relationships (@anerithakkar_)

பார்சலை எடுத்துச் செல்ல வந்த ஊழியர் வீட்டிற்கு வந்தபோது மதுபோதையில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர் தன்னிடம் வீட்டுக்குள் புகைபிடிக்கலாமா என கேட்டதாகவும் அனேரி தாக்கர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தனக்கு மிகவும் அசௌகரியத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், உபெர் பார்சல் ஊழியர் குறித்து பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இன்ஃப்ளூயன்சர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விவரங்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.