பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் பாரிசில் அதிகாலை நேரத்தில் 25 வயது மதியத்தக்க இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அதாவது இந்தப் பெண் தனியாக நடந்து செல்வதை நோட்டமிட்ட 5 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் அந்தப் பெண் தனியாக ஒரு இடத்தில் சிக்கிய நிலையில் அவரை 5  பேரும்  சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களிடமிருந்து தப்பி ஓடி அந்தப் பெண் அங்கிருந்த ஒரு உணவகத்தில் நுழைந்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஐவரில் ஒருவர் திடீரென உணவகத்திற்குள் நுழைந்து விட்டார். அவர் அந்த பெண்ணின் பின்னால் தட்டினார். உடனடியாக அந்த கடையின் உரிமையாளர் அவரை  பிடிக்க முயற்சித்தார். சுதாகரித்துக் கொண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மேலும் அந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் அரைகுறை ஆடையில் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.