
பொதுவாகவே பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழியை அனைவரும் அறிந்திருப்போம். பாம்புகளைக் கண்டால் பயப்படுவதற்கு காரணம் அதன் விஷம் தான். பாம்பின் விஷம் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்கது. உலகிலேயே மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்றாக இருக்கும் பாம்பின் விஷம், மனிதர்களை முடக்குவதற்கும் உயிரை பறிப்பதற்கும் எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உலகில் உள்ள அனைத்து பாம்புகளும் விஷத்தன்மை கொண்டவை இல்லை என்றாலும் கூட பாம்புகளிடம் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். உலகிலேயே மிகவும் கொடிய விஷமுள்ள பாம்பாக ராஜ நாகம் உள்ளது.
இந்த வகை பாம்புகள் இந்தியாவில் தான் அதிகம் உள்ளன. குறிப்பாக கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இவை அதிகமாக வசித்து வருகிறது. ராஜநாகம் மனிதனை கடித்து விட்டால் 200 முதல் 500 மில்லி கிராம் விஷயத்தை மனிதனின் உடம்பில் செலுத்தும். பொதுவாக ராஜநாகம் கடித்தால் இரண்டு முதல் ஐந்து மணி நேரத்திற்குள் மனிதன் உயிரிழக்க நேரிடும். முடிந்த அளவிற்கு மிக விரைவில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும்.
ராஜநாகம் தீண்டியதும் முதலில் மங்கலான பார்வை, உடல் முடக்கம் மற்றும் மயக்கம் போன்றவை ஒருவர் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. மற்ற பாம்புகளுடன் ஒப்பிடும்போது ராஜநாகம் அதிக விஷத்தை உற்பத்தி செய்கின்றது. ராஜ நாகத்தின் பத்தின் ஒரு பங்கு விஷம் கூட கடிபட்ட நபரின் உயிரை பறிக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. பொதுவாகவே பாம்புகளுக்கு வலுவான தாடைகள் இருக்காது. அதனால் பாம்புகளால் தங்களை தற்காத்துக் கொள்வதற்கும் இறையை வேட்டையாடுவதற்கும் சிரமப்படும். இதனால்தான் இயற்கையாக பாம்புகளுக்கு விஷ தன்மை உள்ளது.