
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் முகமது குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு பேக்கரி கடை வைத்து நடத்தி வரும் நிலையில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய கடைக்கு நேற்று முன்தினம் 6 வயது சிறுமி சாக்லேட் வாங்குவதற்காக சென்றுள்ளார். அந்த சிறுமியை முகமது சாக்லேட் தருவதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் வந்து கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பின்னர் முகமது குட்டியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.