பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சல்மான்கான். இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஒரு பட சூட்டிங்காக சென்றபோது அங்கு கரும்புலி மானை வேட்டையாடியதோடு அதனை சமைத்து சாப்பிட்டார். இது தொடர்பாக நடிகர் சல்மான்கான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த கரும்புலி வகைமான பிஷ்னோய் சமுதாய மக்கள் புனிதமான கடவுளாக வணங்குகிறார்கள்.

இதன் காரணமாக கடந்த 1998 முதல் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து நடிகர் சல் மான்கானுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகிறது. பிரபல பாடகர் சித்து‌ மூஸ்வாலா ஆகியோர் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் காரணமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் சல்மான் கானுக்கு நெருக்கமாக இருந்ததாக கூறி முக்கிய அரசியல்வாதியான மகாராஷ்டிராவை சேர்ந்த பாபா சித்திக்கையும் அந்த கும்பல் படுகொலை செய்தது.

தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருக்கும் நிலையில் அங்கிருந்தே அவர் திட்டம் தீட்டி கொலைகளை நிகழ்த்தி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளிகள் சிலர் சிக்கிய நிலையில் குற்றப்பத்திரிக்கையில் அவரை கொலை செய்ய 25 லட்ச ரூபாய் வரை அந்த கும்பல் டீல் பேசியதாக தகவல் வெளிவந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது மும்பை போலீஸ் whatsapp-க்கு நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து 5 கோடி ரூபாய் கேட்டுள்ளனர். அதாவது சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் பிஷ்னோய் கும்பலுடன் ஆன மோதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். எனவே சல்மான் கான் ரூ.5 கோடி தர வேண்டும். இல்லையெனில் பாபா சித்திக் நிலையை விட மோசமான நிலையை சல்மான் கான் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளனர். மேலும் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் வருவதால் சல்மான் கானுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.