மத்திய மந்திரி அமித்ஷா  நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது ஊழலை மறைப்பதற்காக தற்போது மொழி பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாக திமுக அரசை சாடினார். இதற்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு இது பற்றி கூறியதாவது, பாஜக பியூஸ் போன பல்பு. அது ஏதாவது ஒன்றை எப்போதும் செய்து கொண்டே இருக்கும். நாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஊழலை மறைப்பதற்காக தான் திமுக ஹிந்தி மொழி திணிப்பை எதிர்ப்பதாக அமைச்சர் கூறுவது ஏற்புடையது அல்ல.

பாஜக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என அனைத்து ஏஜென்சிகளையும் வைத்துக்கொண்டு சுற்றி திரிகிறது. அமலாக்க துறையின் இந்த செயலை நீதிமன்றம் கூட கண்டித்துள்ளது. திமுகவை மிரட்டி பார்க்கும் நோக்கத்துடன் அமைச்சர் இதை செய்கிறார். ஆனால் நம்முடைய முதலமைச்சர் ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதில் உயிர் போனால் கூட துணிந்து நிற்பேன் என்று கூறியுள்ளார். எனவே இந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட கூடிய கட்சி திமுக கிடையாது என்று கூறினார்.