நாடு முழுவதும் நேற்று  மறைந்த முன்னாள் முதல்வர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக கட்சியின் எம்எல்ஏ முனிரத்தினா சென்றார். அப்போது சில மர்ம நபர்கள் அவர் மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக மூவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக எம்எல்ஏ முனிரத்தினா  கூறும் போது, இது ஒரு கொலை முயற்சி. கிட்டத்தட்ட 150 பேர் என்னை கொலை செய்ய வந்திருந்தனர். என்னுடைய ஆதரவாளர்களும் போலீஸ்காரர்களும் இல்லையெனில் என்னை கண்டிப்பாக கொலை செய்திருப்பார்கள். மேலும் இந்த விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.