
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் நடிகர் விஜய் மாநாட்டில் மிகவும் ஆக்ரோஷமாக பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை எடுத்ததோடு கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டி என்று அறிவித்தது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜயின் முதல் மாநாடு பற்றி பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பாஜக சார்பில் கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் உடன் நடிகை ராதிகா கலந்து கொண்ட நிலையில் அவர் விஜய் மாநாடு பற்றி பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு நான் மனதார வாழ்த்துகிறேன். அரசியலுக்கு வரும் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்வதற்காக வரும் நிலையில் அவர்கள் கூடிய கொள்கைகளுக்கு ஏற்ப அதனை செய்வார்கள். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் அவர் தற்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவு செய்தது மிகவும் நல்லது தான். நான் சிறு வயது இருக்கும்போது விஜயின் தந்தை படங்களில் ஏராளமாக நடித்துள்ளேன்.
சிறுவயதில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு எடுத்தது சரியான விஷயம் என்றார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ராதிகாவிடம் பாஜகவை விஜய் தாக்கி பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் திமுகவை நேரடியாக விஜய் விமர்சித்துள்ளார். ஆனால் பாஜகவை பற்றி அவர் படி பேசவில்லை. அதிமுகவையும் அவர் விமர்சிக்காததற்கான காரணம் எனக்கு தெரியும்.
பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு முன்பாக விஜய் கண்டிப்பாக யோசித்து தான் பேசுவார். அவர் அரசியலை வேறு விதமாக பார்க்கிறார். நான் தெறி படத்தில் விஜயோடு சேர்ந்து நடித்துள்ளேன். அவர் பொதுவெளியில் அவ்வளவாக பேச மாட்டார். அப்படி இருக்கும்போது முதல் மாநாட்டில் விஜய் மிகவும் ஆக்ரோஷமாக பேசியது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. மேலும் அவர் அடுத்ததாக தன்னுடைய கட்சிக்காரர்களை அடையாளம் காட்டி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.