விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அந்த விழாவில் பேசிய விஜய், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மாநில அரசிற்கு தர மாட்டார்களாம். எல்கேஜி யுகேஜி பசங்க சண்டை போடுவார்களா இல்லையா? அதுபோலத்தான் இந்த விஷயத்தில் நடந்து கொள்கிறார்கள். நிதியை கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை, அதனை வாங்க வேண்டியது இவர்களின் கடமை. ஆனால் இவர்கள் இருவரும் அதுதான் நமது பாசிசமும் பாயாசமும் என பேசி வைத்துக்கொண்டு மாறி மாறி சோசியல் மீடியாவில் ஹேஸ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்வார்களாம் அதை நாங்கள் நம்ப வேண்டுமாம். இது எல்லாம் பெரிய ஏமாற்று வேலை என்று மறைமுகமாக திமுகவையும் பாஜகவையும் விஜய் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் விஜயின் பேச்சுக்கு கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், வசனம் பேசுவதில் வல்லவரான விஜய் ஒன்றிய பாஜக அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும் பதுங்கியும் பேசுவது ஏன்? பாசிசம் – பாயாசம் என்று தொடர்ந்து நக்கல் அடிப்பதை பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்று கருத வேண்டி உள்ளது. ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும். பாசிசம் மிகவும் பயங்கரமானது படுகொலைக்கும் தயங்காது, அதுவே பாயாசம் சுவையானது உடல் நலத்திற்கு நல்லது என சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.