பாகிஸ்தான் நாட்டில் உள்ள அவுரையா மாவட்டத்தில் ஒரு கோர சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில், தெருவில் நடந்து சென்ற இரு சிறிய குழந்தைகளில் ஒருவரான சிறுமி மீது, அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென வலுக்கட்டாயமாக முத்தமிட்டு தப்பியதைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சிறுமி அதிர்ச்சியில் உறைந்து நின்றபடியே, தனது தம்பியை தைரியப்படுத்த முயலும் காட்சி பலரை உருக்கியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியவுடன், பலரின் கோபத்தையும் வேதனையையும் கிளப்பியுள்ளது. “சிறுமி மீது இப்படி நடந்துகொள்ளும் அளவுக்கு மனிதாபிமானம் குறைந்துவிட்டதா?” என்ற கேள்விகள் எழுந்துள்ளன. முன்னதாக லாகூரிலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. அங்கும் ஒரு சிறுமியை தெருவில் வைத்து ஒருவன் வலுக்கட்டாயமாக முத்தமிட்டான். ஆனால் அங்கு சத்தம் கேட்டவர்கள் குற்றவாளியை விரட்டி உள்ளனர்.

இந்த சம்பவங்கள் இரண்டும், பாகிஸ்தானில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் போதுமானதா என புதிய கேள்விகளை எழுப்புகின்றன.

“>

சமூக ஊடகங்களில் பலரும், இத்தகைய குற்றங்களை மேற்கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், குழந்தைகள் பாதுகாப்பிற்கான சட்டங்களை அரசு உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். “இது ஒவ்வொரு பெற்றோருக்கும் எச்சரிக்கையாய் அமைய வேண்டும்” என குழந்தை பாதுகாப்பு உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.