பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு நகரங்களில் இன்று காலை திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்துறைக்கான செய்தி தொடர்பாளர் இம்ரான் ராணா வெளியிட்ட செய்திகுறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது, வெவ்வேறு நகரங்களில் முக்கிய பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என கூறியுள்ளார். அந்த வகையில் லாகூர் மற்றும் கராச்சி நகரங்களில் மின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஆசாத் அலி தூர் ட்விட்டரில் கூறியதாவது, இன்று காலை 7:30 மணியிலிருந்து நாடு முழுவதும் மின்நியோக துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பாகிஸ்தானில் குவாட்டர் உட்பட 22 மாவட்டங்களில் மின்  துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பாதிப்புகள் நீடித்து வருகின்ற நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் கராச்சி, லாகூர்  உட்பட மாகாண தலைநகரங்களில் 12 மணி நேரத்திற்கும் கூடுதலாக மின்வெட்டு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.