காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிகளையும் இந்தியா நிறுத்தியதோடு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் வலியுறுத்திய நிலையில் நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் இடங்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. அதன்படி லஸ்கர் இ  தொய்பா அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபாபாரத், ஜெய்ஸ் இ முகமது அமைப்பு செயல்படும் பஹவல்பூர், ஹிஸ்புல் முகாஜிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லி, சிகல் கோட் ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

 

இந்த தாக்குதல் முழுக்க முழுக்க தீவிரவாதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் மட்டும்தான் தவிர பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு மத்திய அரசு முழுமையான விளக்கம் கொடுக்கவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த இடங்களில் பெயர்கள் வெளியாகியுள்ளது. அதன்படி,

1. மார்கஸ் சுப்ஹான் அல்லாஹ், பாவல்பூர்

2. மார்கஸ் தாயிபா, முரீட் கே

3. சர்ஜால் / தேஹ்ரா கலான்

4. மெஹ்மூனா ஜோயா நிலையம், ஸியால்கோட்

5. மார்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்நாலா, பிம்பர்

6. மார்கஸ் அப்பாஸ், கோட்லி

7. மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது

8. ஷவாய் நல்லா கேம், முஸாஃபராபாத்

9. மார்கஸ் ஸையத் நா பிலால்

ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.