பொதுவாகவே நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே நாம் தேர்வு செய்கிறோம். தற்பொழுது புத்தாண்டு பிறக்க இருக்கிறது. பொங்கல் பண்டிகை அடுத்ததாக வர இருக்கிறது. இதுபோன்ற சூழலில் எங்காவது வெளியே சுற்றுலா செல்ல திட்டமிட்டாலோ அல்லது வெளியூர் செல்ல வேண்டும் என்றாலும் குடும்பத்தோட செல்வதாக இருந்தால் ஒரு ரயில் பெட்டி முழுவதும் முன்பதிவு செய்ய விரும்புவார்கள். ஒருவேளை விடுமுறை நாட்களில் எங்காவது வெளியே செல்ல திட்டமிட்டால் ரயிலின் முழு பெட்டியையும் முன்பதிவு செய்ய முடியும்.

திருமணம் அல்லது சுற்றுலா போன்ற வேறு எதுவும் காரணங்களுக்காக ரயில் முழுவதையும் முன்பதிவு செய்து பயணிக்க விரும்பினால் ஒரு பெட்டியை மட்டும் முன்பதிவு செய்யாமல் முழு ரயிலையும் புக்கிங் செய்யலாம். அது எப்படி அதற்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். இதற்கு பயணிகள் டிக்கெட் விலையில் முப்பது முதல் நாற்பது சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி ரயிலின் முழு பெட்டிக்கும் பாதுகாப்பு கட்டணமும் செலுத்த வேண்டும். அதன் பிறகு அந்த பணம் உங்களிடமே திருப்பிக் கொடுக்கப்படும்.

ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ரயிலின் முழு பெட்டியையும் முன்பதிவு செய்யலாம். அந்த இணையதளத்தில் FDR  சர்வீஸ் ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லவும். அதன் பிறகு தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும். பெட்டியை முன்பதிவு செய்வதற்கான இருக்கையை தேர்ந்தெடுத்து அதன் பிறகு அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். ரயிலின் ஒரு பெட்டிக்கு 50,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல ரயிலின் முழு பெட்டியையும் முன்பதிவு செய்ய விரும்பினால் ஒரு ரயிலில் 18 பெட்டிகள் இருக்கும் பட்சத்தில் மொத்தம் ஒன்பது லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.