தமிழகத்திற்கு வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாஜக மற்றும் அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இதனை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் இதனை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,  பாஜகவும் திமுகவும் உள்ளுக்குள் உறவுக்காரர்கள் தான்.

திமுகவை மறைமுக கூட்டணியாக ஏற்கனவே பாஜக தயார் செய்துள்ள நிலையில் தற்போது தங்களுடைய பழைய பங்காளியான பாஜகவை பகிரங்க கூட்டாளியாக மீண்டும் கைப்பற்றியுள்ளது ஆச்சரியமில்லை.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நாங்கள்தான் பாஜகவுக்கு எதிரான ஒரே அணி என்று திமுகவும் நாங்கள் தான்  திமுகவுக்கு எதிரான ஒரே அணி என்று பாஜகவும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவார்கள். தமிழக மக்கள் விழித்துக் கொண்டதால் இனி அத்தகைய நாடகங்களை பாஜகவும் திமுகவும் நடத்தினாலும் நம்ப மாட்டார்கள்.

மேலும் பிளவுவாத பாஜக மற்றும் மக்கள் விரோத திமுகவின் மறைமுக கூட்டு கணக்குகளுக்கு மக்களால் நிர்பந்திக்கப்பட்ட நேரடி நிர்பந்த கூட்டுக்கும் தமிழக மக்கள் 2026 தேர்தலில் பாடம் புகட்டி வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.