பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். உள் மாநிலத்தில் இருந்து மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து கோவில் உண்டியலில் பணம், தங்க பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதன்படி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 51 ஆயிரத்து 581-ம், தங்கம் 657 கிராம், வெள்ளி 9 கிலோ (9,217 கிராம்), வெளிநாட்டு கரன்சி 406-ம் கிடைத்தது. 2-வது நாளில், ரூ.56 லட்சத்து 61 ஆயிரத்து 505 வருவாயாக கிடைத்தது. தங்கம் 158 கிராம், வெள்ளி 19 கிலோ 85 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 83-ம் கிடைத்தன.