தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி வளாகங்களில் மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகளை சுத்தமாகவும், குளோரின் கலந்தும் பராமரிக்க வேண்டும்.  கல்வி நிறுவனங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர கொசு உற்பத்தி உள்ளிட்டவற்றை தடுக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.