
உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் தான் பிரியம் கோயல். இவர் பணி நேரத்தில் தன்னுடைய செல்போனில் கேண்டி க்ரஷ் என்ற ஆன்லைன் கேமை விளையாடியுள்ளார். இது தொடர்பாக தகவல் கசிந்ததை தொடர்ந்து மாவட்ட நீதிபதி ராஜேந்திர பன்சியா அந்த பள்ளிக்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்ட போது அவர் எடுத்த வகுப்பில் மாணவர்களின் நோட்டு புத்தகங்களை சரிபார்த்து உள்ளார்.
அதில் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை பல தவறுகள் இருந்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அனைத்திற்கும் ஆசிரியர் டிக் அடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆசிரியரின் செல்ஃபோன் ஆய்வு செய்யப்பட்டபோது பள்ளி செயல்படும் நேரத்தில் அவர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கேண்டி க்ரஷ் கேம் விளையாடியதும் 26 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியதும், 30 நிமிடங்கள் சமூக ஊடகப் பயன்பாடுகளை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.