கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முருகன் எஸ்டேட் பகுதியை சுற்றி இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. நேற்று அதிகாலை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள் நுழைந்த காட்டு யானைகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் சுற்று சுவரையும், நுழைவு வாயில் சுவரையும் உடைத்தது. இதனையடுத்து சத்துணவு மையத்தின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து காட்டு யானை அங்கிருந்த பொருட்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியது.

இதனை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். ஆனால் அருகில் இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு நின்று கொண்டிருப்பதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.