பிரிட்டனில் ஒரு மனைவியை கணவன் பல வருடங்களாக தூக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்தப் பெண் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில் இது பற்றியபிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தன்னுடைய மன வேதனையை பகிர்ந்துள்ளார்.

இது பற்றி அந்தப் பெண் கூறியதாவது, என்னுடைய கணவன் பல வருடங்களாக தூக்க மருந்து கொடுத்து என்னை பலாத்காரம் செய்த நிலையில் அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதனை ஒருநாள் சாதாரண உரையாடல் போன்று என்னிடம் அவர் கூறிவிட்டார். இதை நினைத்து நான் மிகவும் மன வேதனை அடைந்தேன்.

சில நேரங்களில் நான் விழித்துக் கொண்ட போதிலும் தூக்கத்தில் நடந்து விட்டது என கணவர் சமாளித்துள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார். இது பற்றி முதலில் தெரியவந்த நிலையில் தன் பிள்ளைகளுக்காக அதனை நினைத்து பயப்பட்ட நிலையில் பின்னர் துணிச்சலாக தன் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதாவது தன் சகோதரியிடம் அந்த பெண் நடந்த விவரங்களை கூறவே அவரின் உதவியோடு போலீசில் புகார் கொடுத்தார். இந்த வழக்கு ஐந்து வருடங்களுக்குப் பிறகு நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் அந்த கணவருக்கு 11 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ஆயுள் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.