கர்நாடக மாநிலத்தில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேஜஸ்வினி என்ற 20 வயது மகள் இருந்துள்ளார். இவர் பியூசி படித்துவிட்டு ஒரு ரீசார்ஜ் கடையில் வேலை வந்துள்ளார். இந்நிலையில் தேஜஸ்வினி கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியின் காரணமாக அவதிபட்ட நிலையில் மருத்துவமனையில் இதற்காக சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவருக்கு வலி சரியாகததால் மிகுந்த மன வேதனையில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வயிறு வலி காரணமாக வீட்டில் இருந்த தேஜஸ்வினி பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது தங்கள் மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.