பொதுவாகவே பெண்கள் பலருக்கும் நீளமான நகங்களை வளர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் சில நேரங்களில் தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்யும் போது பாதுகாப்பாக வளர்த்து வந்த நகம் உடைந்து விடும். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய சில விஷயங்களை பார்க்கலாம்.

நகங்களை பராமரிப்பதற்கு இரவு தூங்குவதற்கு முன்பு பாதாம் எண்ணையை லேசாக சூடாக்கி பருத்தித் துணியால் அந்த எண்ணையை நகங்களின் மேல் தொட்டு வைத்து இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் நகங்கள் வலுவாக இருக்கும். பாத்திரங்களை கழுவுதல் போன்ற வேலைகளை செய்யும் போது கைகளில் தொற்று ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க கைகளில் பாதுகாப்பு உரையை அணிந்து கொள்ளலாம்.

அதேசமயம் விரல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுத்தமாக வைப்பதும் அவசியம். நகம் கடினமாக உள்ளவர்கள் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி வந்தால் நகம் பளபளப்பாக மாறும். வாரத்திற்கு ஒருமுறை நகை இடுக்குகளில் உள்ள அழுக்குகளை அகற்றி நகத்தை ஷேப் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய விரும்பாதவர்கள் அதிகமாக வளரும் நகங்களை மட்டும் வெட்டி விடலாம். அளவுக்கு மீறி நகம் வளர்ப்பது உடைவதற்கு காரணமாக அமைந்து விடும். நகங்களுக்கும் சுவாசிக்கும் தன்மை இருப்பதால் அடிக்கடி நெயில் பாலிஷ் போடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி நெயில் பாலிஷ் பயன்படுத்தினாலும் அதனை சரியான முறையில் நீக்க வேண்டும். ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை குடிப்பது நகங்களை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவும். அதாவது ஒரு நாளைக்கு ஆறு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.