தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்துவார். இவர் தற்போது தன்னுடைய 50-வது படமான மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் ஹைதராபாத்தில் நடிகர் விஜய் சேதுபதி ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்ட போது பேசினார்.

அவர் பேசியதாவது, அழகு மற்றும் புத்திசாலித்தனம் என்பது ஒருவரின் தோற்றத்தை பொருத்து கிடையாது. பல நடிகர்கள் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார்கள். அவர்கள் வைத்துள்ளார்கள் என்பதற்காக நானும் அப்படி இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. அழகு மற்றும் புத்திசாலித்தனம் என்பது ஒருவரின் உடல் தோற்றத்தை பொறுத்தது கிடையாது. இதனால் நான் அவர்களுக்கு எதிரானவர்கள் என்று நினைத்து விடாதீர்கள். ஒருவேளை படத்திற்கு தேவைப்பட்டால் இயக்குனர் அதற்கு எனக்கு அவகாசம் கொடுத்தால் கண்டிப்பாக நானும் அப்படி மாற தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.