தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் தற்போது கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு இணைந்துள்ளார். அதாவது வடிவேலு மற்றும் சுந்தர் சி இருவரும் இணைந்து படத்தில் நடிக்காமல் இருந்த நிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை கேத்தரின் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீசாகும் நிலையில் தற்போது ட்ரெய்லர் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் 100 கோடி ரூபாயை திருடுவதற்காக முயற்சி செய்வது போன்று இருக்கிறது. அதன் பிறகு நடிகர் வடிவேலு படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த ட்ரெய்லர் தற்போது நகைச்சுவையாக இருக்கும் நிலையில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இதற்கு முன்பு சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது இந்த திரைப்படமும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.