தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இவர் நடனத்தில் மிகவும் திறமை வாய்ந்தவர். இவர் மடக்கி தட்டு, கிஸிக் போன்ற பாடல்களுக்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றார். நடிகை ஸ்ரீலீலா ரசிகர்களின் இளம் கனவு கன்னியாக வலம் வரும் நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகிறது. இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by PapaPaparazzi (@papapaparazziofficial)

இந்த படத்திற்காக கார்த்திக் ஆர்யன் மற்றும் நடிகை ஸ்ரீலீலா இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றபோது ரசிகர்கள் இருபுறமும் சூழ்ந்து நின்றனர். அப்போது கூட்டத்தில் நின்ற ரசிகர் ஒருவர் திடீரென நடிகை ஸ்ரீலீலாவை கட்டாயப்படுத்தி தன் வசம் இழுத்துக் கொண்டார். உடனடியாக பாதுகாவலர்கள் அவரிடம் இருந்து நடிகை ஸ்ரீலீலாவை மீட்டனர். இதனால் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.