தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் சந்தியா தியேட்டரில் அல்லு அர்ஜுன் நடிப்பில் ரிலீசான புஷ்பாபு படத்தை பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். நேற்று தெலுங்கானா சட்டசபையில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து அல்லு அர்ஜுன் அவரது கருத்தை தெரிவித்தார். ஆன்லைனில் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசி பூந்தொட்டிகளை உடைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 8 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் ஹூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.