
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூம் மாவட்டம், ஆதித்யபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்ரகுப்தா நகர், கம்ஹாரியா பகுதியில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றிய கிருஷ்ண குமார் (வயது 45), அவரது மனைவி டோலி தேவி மற்றும் இரண்டு மகள்கள் உட்பட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் வீட்டு கதவை உடைத்துச் சென்றபோது, நான்கு பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது கிருஷ்ணகுமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கிமோதெரபி மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில் மன உளைச்சலில் கிருஷ்ணகுமார் தனது மனைவியும் மற்றும் இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.