நாடு முழுவதும் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நேரத்தில் வழக்கத்தை விட மின் பயன்பாடு அதிகரிக்கும். இதனை ஈடு செய்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது ஒப்புதல் அளித்துள்ளது.

இதனையடுத்து மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பயனர்கள் கிலோ வாட் மின்சாரத்திற்கு கூடுதலாக 15 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 25 பைசா முதல் 70 பைசா வரை உயர். இந்த கட்டணம் முறையானது இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.