வங்காளதேச நாட்டில் உள்ள பைரப் ரயில் நிலையத்திலிருந்து டக்கா நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்டது. ரயில் புறப்பட்டு சில நிமிடங்களில் அடுத்த தண்டவாளத்திற்கு செல்ல பாதையில் டிராக் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ட்ராக் மாற்றத்தில் ரயில் மெல்ல சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென அதே தண்டவாளத்தில் சரக்குரையிலும் வேகமாக வந்துள்ளது.

பயணிகள் ரயில் முழுமையாக அடுத்த தண்டவாளத்திற்கு செல்வதற்கு முன்பாகவே சரக்கு ரயில் வந்து எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பயணிகள் ரயிலில் 100 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.