தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மொத்தம் 9,111 ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 19 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் 239 சேவைகளாக இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து குஜராத், மேற்கு வங்காளம், டெல்லி, பீகார், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும். மேலும் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு கவுண்டர் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் வழியாக பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.