தெலுங்கானா மாநிலத்தில் விகாராபாத் மாவட்டத்தில் லாகர்சாலா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு மருந்தகம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றனர். அதன்படி பொதுமக்களிடம் கருத்து கேட்க மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின் சென்ற நிலையில் அவருக்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்பியதோடு நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அந்த இடத்தில் இருந்து கிளம்ப தயாரானார். அப்போது வாகனத்தை துரத்திய கிராம மக்கள் கல்லெறிந்து கண்ணாடியை உடைத்து சேதபடுத்தினர். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.