மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் தேசிய அளவிலான மருத்துவ மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட  டாக்டர்களுக்கு உணவு தயார் செய்த போது பாத்ரூம் தண்ணீரை பயன்படுத்தியதாக தற்போது ஒரு வீடியோ வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6-ம் தேதி நாடு முழுவதும் இருந்து பல மருத்துவர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது உணவு சமைக்க பாத்ரூமில் இருந்து தண்ணீரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் கல்லூரி நிர்வாகம் பாத்திரங்களை கழுவுவதற்கு மட்டும் பாத்ரூம் தண்ணீரை பயன்படுத்தியதாக விளக்கம் கொடுத்துள்ளது. உணவு தயார் செய்வதற்கு அந்த தண்ணீரை பயன்படுத்தவில்லை எனவும் இருப்பினும் இது தொடர்பாக விரிவான விசாரணை தேவை என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்த வீடியோவை வைத்து தற்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.