ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா அணி தொடங்கிய நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறியது. இதனால் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களில் சுருண்ட நிலையில் அடுத்த இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடியது. தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இறங்கிய நிலையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 218 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 3-ம் நாள் போட்டியின் போது இந்தியா சிறப்பாக விளையாடிய நிலையில் இதுவரை 321 ரன்கள் பெற்றுள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 141 ரன்களுடன் படிக்கல் 41 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டாம் நாள் போட்டியின் போது ஹர்ஷித்ராணாவிடம் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் உன்னை விட நான் வேகமாக பந்து வீசுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெய்ஸ்வால் மேட்ச் நடக்கும் போது இவ்வளவு மெதுவாகவா பந்து வீசுவீர்கள் என்று ஸ்டார்க்கை சீண்டினார். அடுத்தடுத்து தன்னுடைய ரன்களால் அவருக்கு பதிலடி கொடுத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.