இந்தியாவின் தேசிய விலங்கு புலி மனிதர்களை வேட்டையாட கூடியவை. சமீபத்தில் கூட ஒரு பெண்ணை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலியை கேரளாவில் வனத்துறையினர் சடலமாக மீட்டனர். இந்நிலையில் வயல்வெளியில் ஒரு புலி ஒன்று பதுங்கி நிற்கும் வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புலி அங்கு பதுங்கி நின்று அந்த வழியாக வருபவர்களை வேட்டையாட காத்திருக்கிறது.

அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை வேட்டையாட புலி முயற்சி செய்யும் நிலையில் அவர்கள் அதனை பார்த்து பைக்கை நிறுத்திவிட்டதால் அந்த புலி வேட்டையாடாமல் அமர்ந்து விட்டது. மேலும் இதனை வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.