பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக கங்கை நதிக்கரைக்கு வந்தனர். இதனை தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கங்கையில் பதக்கங்களை வீச விடாமல் தடுத்துள்ளார் விவசாயிகள் சங்கத்தலைவர் நரேஷ்திகயாத்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சாக்ஷி மாலிக், “ஒலிம்பிக் சென்று விளையாடி பதக்கங்கள் வென்று திரும்பியபோது தம் வீட்டு மகள்கள் என்று அழைத்த மோடி, தற்போது போராட்டங்கள் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார். குடியரசுத் தலைவர் ஒரு பெண்ணாக இருந்தும் பாலியல் தொல்லை குறித்து கவலைப்படாமல் இருக்கிறார். எனவே அவர்களிடம் பதக்கங்களை தர விரும்பவில்லை. என் தாய் கங்கையிடமே தருகிறேன்.” என்று விளக்கமளித்துள்ளார்.