மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதோடு பலர் தங்களது உடமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள் பலர் அனுமதிக்கப்படாத கால வரையற்ற விடுப்பில் இருந்து வருகின்றனர். சிலர் வெளியூர்களில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இவர்கள் பணிக்கு வரா விட்டாலும் இவர்களுக்கான ஊதியமானது தவறாது சென்றடைகிறது. இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, அரசு உழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. “No Work No Pay” பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.