
தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டங்களில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டில் பெரும் வருமானத்தை பெறலாம். இது வங்கிகளில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தை விட அதிக லாபத்தை தருகின்றது. அதனைப் போல இதில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி சேமிப்பு சலுகையும் உள்ளது.
இந்தத் திட்டத்தில் வருமான வரித்துறையின் 80சி பிரிவின் கீழ் 1.50 லட்சம் தள்ளுபடி பெறலாம். பொதுவாக வங்கிகள் 5 வருட பிக்ஸ்ட் டெபாசிட் திட்டத்திற்கு 7 முதல் 7.50 சதவீதம் பட்டி லாபம் தருகிறது. ஆனால் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டமானது அதைவிட அதிக வருமானம் தருகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கலாம்.