தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு தெலுங்கில் அதிக அளவில் பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் சமீபத்தில் சலார் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை சுருதிஹாசன் தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு சுருதிஹாசன் நடிக்கும் தமிழ் படம் இதுவாகும். நடிகை ஸ்ருதிஹாசன் முன்பு ஒருவரை காதலித்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். அடுத்ததாக மும்பையைச் சேர்ந்த டூடுல் கலைஞர் ஆன சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்தார்.

இருவரும் லிவிங் லைப்பில் இருந்த நிலையில் திடீரென பிரிந்து விட்டனர். இந்நிலையில் தற்போது பிரிவுக்கான காரணம் குறித்து சுருதிஹாசன் முதல் முறையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஆணோ பெண்ணோ நிதி சார்ந்த விஷயங்களில் கண்டிப்பாக இருவரும் மதிப்பு கொடுக்க வேண்டும். டேட்டிங் சமயத்தில் பெண்கள் மட்டும் தான் செலவழிக்க வேண்டும் என்று சில ஆண்கள் நினைக்கிறார்கள். வசதி படைத்த பெண்களுடன் டேட்டிங் செல்லும் ஆண்கள் செலவு செய்வதற்கு முன் வருவது கிடையாது. டேட்டிங் செய்த போது நானும் இது போன்ற பிரச்சனையை தான் எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்லும்போது ஆண்கள் செலவு செய்ய முன்வருவதில்லை என்று ஸ்ருதிகாசன் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.