புதுச்சேரி மாநில தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகி மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்ப கும்பல் சிலர் இவரது காரை வழிமறித்தனர். இவர் மயிலாடுதுறை செம்பனார்கோவில் அருகே சென்றபோது திடீரென அவரது காரை வழிமறித்ததால் அவர்களிடமிருந்து மணிமாறன் தப்ப முயன்றார். ஆனால் அவரை அந்த மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர். இதில் மணிமாறன் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்பதால் இதற்கு பழிக்கு பழியாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.