ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சி தொடர்ந்து பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் கிராமப்புறத்திலும் நகர்ப்புறத்திலும் இருந்து வந்த பல திறமையாளர்கள் தங்களது நடன திறனை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு தளமாக இது அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பஞ்சமி, 23 வயதில் மூன்று குழந்தைகளின் தாயாக இருந்தும், தனது கனவை உண்மையாக்க போராடி வந்திருக்கிறார். வயற்காட்டில் வேலை செய்து குடும்பத்துடன் பொறுப்பை சமாளிக்கும் பஞ்சமி, தனது திறமையால் முதல் இரண்டு வாரங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நடிகை வரலட்சுமி, பஞ்சமியின் சிறப்பான நடனத்தை தனது அப்பா நடிகர் சரத்குமாருக்கு வீடியோ காலில் காண்பித்தார்.

பஞ்சமியின் அர்ப்பணிப்பை பார்த்து பெரும் உற்சாகத்தில் இருந்த சரத்குமார், அவரை அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டுக்கு அழைத்ததோடு, பஞ்சமியின் கணவரின் ஆதரவை பாராட்டினார். இதை தொடர்ந்து பாபா பாஸ்கர், சரத்குமார் பற்றிய ஒரு ரகசியத்தை வெளியிட்டார். சரத்குமார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது, தனது உதவியாளர்களிடம் கேள்விகள் கேட்டு, சரியாக பதில் சொன்னால் பணம் பரிசளிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார் என அவர் கூறினார். ஒரு கவரில் குறைந்தது 20 ஆயிரம் ரூபாயாவது வைத்து, ஷூட்டிங் இடைவெளியில் அனைவருக்கும் பரிசளித்து மகிழ்விப்பது அவரது வழக்கமாகும்.

இதற்கிடையில், வரலட்சுமி தனது அப்பா பற்றிய இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்துள்ளார். அவரது நண்பர்கள் சிலர் டூர் செல்ல விரும்பியபோது, அவர்களிடம் போதிய பணம் இல்லாததால், உடனே தனது சொந்த காரை விற்று அவர்களுக்கு உதவி செய்துள்ளார். இது குடும்பத்தாருக்கும் பிறகு தான் தெரிய வந்ததாக வரலட்சுமி கூறியிருக்கிறார். சரத்குமார் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஒரு மனிதராகவும் மிகுந்த உதவியும் கருணையும் கொண்டவர் என்பதற்கான உதாரணம் இந்த சம்பவம். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகி, ரசிகர்கள் சரத்குமாரின் மனிதாபிமானத்தை பாராட்டி வருகிறார்கள்.