தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இந்த படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்து வரதராஜனின் உண்மை கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் படம் ரிலீஸ் குறித்த போஸ்டர்களின் நடிகை சாய் பல்லவியின் போட்டோ இடம் பெற்றநிலையில் வெற்றி போஸ்டர்களின் மற்றும் சாய் பல்லவியின் படம் இடம்பெறவில்லை.

இது தொடர்பாக பாடகி சின்மயி தன்னுடைய x பக்கத்தில் வெற்றியில் மட்டும் ஹீரோயின்களுக்கு பங்கு இல்லையா என்றபடி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது மாறிடு மற்றும் அமரன் போன்ற படங்களின் ஈர்ப்பே நடிகை சாய் பல்லவி தான். ப்ரோமோஷன் செய்யும்போது முக்கியமானவராக இருந்த அவர் படங்களின் வெற்றியின் போது மட்டும் முக்கியமானவராக இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோன்று டிசைன்கள் பலரும் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெற்றி போஸ்டர்களில் எதற்காக சாய் பல்லவியின் படம் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.