நைஜீரியாவை கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் மக்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். இந்நிலையில் ஒகிஜா நகரத்தில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அன்னதானத்தில் பங்கேற்று பசியாற ஏராளமானோர் முண்டி அடித்துக் கொண்டு அங்கு குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 32 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.