உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாப்பூர் மாவட்டத்தில் ஒரு அனுமன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சம்பவ நாளில் வழக்கமான பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. பின்னர் பக்தர்கள் நடமாட்டம் குறைந்த போது மர்ம நபர் ஒருவர் அதனை நோட்டமிட்டு கோவிலுக்குள் வந்தார். அவர் கோவிலின் கருவறை முன்பாக அமர்ந்து அமைதியாக 15 நிமிடங்கள் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் கருவறை அருகே சென்று அனுமன் சிலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை எடுத்து தன்னுடைய பைக்குள் வைத்துக்கொண்டு அக்கம் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று நைசாக பார்த்துவிட்டு திருடிவிட்டு சென்றுவிட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக கோவில் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வருகிறார்கள்.