உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர்களிலிருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் வருவது வழக்கம். திருப்பதி என்றால் திருப்பம் வரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனால் தங்களுடைய வாழ்க்கையிலும் நல்ல ஒரு திருப்பம் ஏற்பட வேண்டும் என்று நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து ஏழுமலையான் தரிசனம் செய்து வருகிறார்கள் . இந்நிலையில் திருப்பதி பக்தர்களின் திருவிழாவாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வருடம் திருப்பதியில் இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெறுகிறது. அதில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவம் வரும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி தொடங்க இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் தெரிவித்தார். இந்த நிலையில் பிரமோற்சவம் தொடங்க உள்ளதால் விஐபி தரிசனம், கருட தரிசனம் உட்பட பக்தர்களுக்கான பல சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.