மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடககங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. “குஷ்” என பெயரிடப்பட்டுள்ள அந்த போதை பொருளானது மனித எலும்புகளில் இருந்து உருவாக்கப்படுகிறது.

அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் ஃபெண்டானில், கஞ்சா மற்றும் சில ரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.19 ஆகும்.